புதிய ஆசிரியர்கள் பணி நிியமனம் எப்போது? -அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

புதிய ஆசிரியர்கள் பணி நிியமனம் எப்போது? -அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

புதிய ஆசிரியர்கள் பணி நிியமனம் எப்போது? -அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிகளில் நிறைவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துவங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக துவாக்குடியில் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின்கீழ் 9.9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சீரணி அரங்கத்தை அவர் திறந்து வைத்தார். இதையடுத்து அங்குள்ள தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை ஆய்வு செய்தார்.

இதையடுத்து ஆசிரியர்களிடம் மாணவர் சேர்க்கை குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் பள்ளியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை அமைச்சர் கண்டு களித்தார்.அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:

பெரும்பாலான பள்ளிகளின் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதனை சீரமைக்கவும், புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு பிறகு ஏற்படும் காலியிடங்களை கணக்கில் கொண்டு புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க்ப்படும்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் 4600 க்கும் மேற்பட்ட நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad