ஆவின் ஏஜெண்ட் முறை ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் 1990களில் மொத்த விற்பனையாளர்களை அறிமுகப்படுத்தியது. அவர்களுக்கு கமிஷனாக லிட்டருக்கு 50 பைசா எனவும், சில்லறை வியாபாரிகளுக்கு 1 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் 2015-19 ஆண்டுகளில் மொத்த விற்பனையாளர்கள் மூலம் மட்டும் 4 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. மேலும் 51 மொத்த விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், இதன்பின் மொத்த விற்பனையாளர்கள் பால் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.
வளர்ந்து வரும் தனியார் நிறுவன மொத்த விற்பனையாளர்களுக்கு நிகராக இவர்களால் விற்பனையை பெருக்க முடியவில்லை என தமிழக அரசு கூறுகிறது. இதனால் 2019ஆம் ஆண்டு முதல் கொள்முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், விற்பனையை உயர்த்த C&F ஏஜெண்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
51 மொத்த விற்பனையாளர்களில் திறமையாக வியாபாரம் செய்த 11 மொத்த விற்பனையாளர்கள் C&F ஏஜெண்டாக
ஆவின் நிர்வாகம் தேர்வு செய்தது. இவர்களுக்கு நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் பால் என்ற அளவில் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மொத்த விற்பனையாளர்களை நியமித்து விற்பனையை விரிவாக்கம் செய்ய
No comments:
Post a Comment