'எளிமையிலும் சொகுசு கேக்குதோ..'! வானதி சீனிவாசனால் விமர்சனத்துக்குள்ளான பிரதமர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

'எளிமையிலும் சொகுசு கேக்குதோ..'! வானதி சீனிவாசனால் விமர்சனத்துக்குள்ளான பிரதமர்

'எளிமையிலும் சொகுசு கேக்குதோ..'! வானதி சீனிவாசனால் விமர்சனத்துக்குள்ளான பிரதமர்

மழைக்கால கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் மழையுடன் தொடங்கியது. இந்நிலையில், கூட்டத்துக்கு வருவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்திக்க பிரதமர் மோடி குடையுடன் வந்தார். அந்த நிகழ்வின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, '' எளிமையான பிரதமர்'' என்று குறிப்பிட்டு பாஜகவினர் பெருமை கொண்டனர்.
குறிப்பாக கோவை தெற்கு பாஜக சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ''பிரதமரின் எளிமை பின்பற்றத்தக்கது'' என்று பகிர்ந்தார். உண்மையில் இதை இந்த அளவுக்கு பெருமை பேச வேண்டிய அவசியம் இல்லை.

மீடியாக்கள் முன்பு தோன்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களை எளிமையாகவே காட்டிக்கொள்ள விரும்புவார்கள். அதற்கு காரணம், மக்களால் உருவான நாம், அவர்கள் முன்பு சாமானியனாக இருக்க வேண்டும் என்பதே. இதுபோன்ற சிறிய விஷயங்களை கூட அனுபவமிக்க அரசியல் தலைவர்கள் பெருமையாக பேசுவது வீண் விளம்பரத்துக்காகவா என்று நெட்டிசன்கள் கமெண்டிட்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad