சொந்த வீடுகூட இல்லை, என் வீட்டில் ரைடாங்க? - முன்னாள் அமைச்சர் கவலை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 24, 2021

சொந்த வீடுகூட இல்லை, என் வீட்டில் ரைடாங்க? - முன்னாள் அமைச்சர் கவலை

சொந்த வீடுகூட இல்லை, என் வீட்டில் ரைடாங்க? - முன்னாள் அமைச்சர் கவலை

அதிமுக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தினர். சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் சொத்து ஆவணங்கள் மற்றும் 25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
திமுக ஆட்சி அமைந்த பின்னர் எதிர்க்கட்சியினர் தரப்பில் நடந்துள்ள இந்த முதல் ஐடி ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ''அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது காவல்துறையை ஏவிவிட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் திமுக அரசு அச்சுறுத்துவதாக'' அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்தது.

இதற்கு மத்தியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், '' எனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசியவர், என்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களுக்கு கணக்கு உள்ளது என்றும் கரூரில் கட்சியின் செயல்பாட்டை தடுக்க திமுக முயற்சிக்கிறது. இந்த சோதனையை நான் எதிர்பார்த்ததுதான்.

சட்ட ரீதியாக நாங்கள் இதை அணுகுவோம். சென்னையிலும், கரூரிலும் எனக்கு சொந்த வீடு கிடையாது. கரூரில் கடந்த 30 வருஷத்துக்கு மேலாக நான் தொழில் செய்து வருகிறேன். ஆட்சியை பிடித்த பின்னர் ஆள் பிடிக்கும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது. கரூரில் அதிமுகவினரை பிடிவாதமாக திமுகவுக்கு மாற முயற்சி செய்கிறார்கள் '' என இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad