சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்; வைகோவிற்கு மத்திய அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 24, 2021

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்; வைகோவிற்கு மத்திய அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்!

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்; வைகோவிற்கு மத்திய அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்!


தலைநகர் டெல்லியில் உள்ள ரயில்வே அமைச்சகக் கட்டடம் ரயில் பவனில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஈரோடு தொகுதி எம்.பி கணேசமூர்த்தி ஆகியோர் இன்று காலை நேரில் சந்தித்தனர். அப்போது பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஷயங்களை மத்திய அமைச்சர் நினைவுகூர்ந்தார். அந்த சமயத்தில் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் செயலாளராக அஷ்வினி வைஷ்ணவ் பணியாற்றி வந்துள்ளார்.

வாஜ்பாய் கால நினைவுகள்

இந்நிலையில் சிறையில் இருந்தவாறு வைகோ எழுதிய கடிதங்களை அஷ்வினி வைஷ்ணவ் தான் பிரதமரிடம் கொண்டு சென்றுள்ளார். வைகோ மீது பிரதமர் வாஜ்பாய்க்கு இருந்த பாசம் குறித்தும், கொள்கை மாறாத தலைவராக வைகோ விளங்குவது பற்றியும் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இந்த சூழலில் மத்திய அமைச்சரிடம் வைகோ கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

தனியார்மயமாகிறதா ஐசிஎஃப்?

அதாவது, இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற ஒரு நிறுவனம், சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆகும். அதுவும், அதைச் சார்ந்த உற்பத்தி அலகுகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றன. அதைத் தனியார்மயம் ஆக்கப் போவதாகச் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.

மத்திய அமைச்சர் கொடுத்த உறுதி

இதனால்,

தொழிலாளர்கள் இடையே அச்சம் நிலவுகின்றது. அதைத் தனியார்மயம் ஆக்கினால், ஆட்குறைப்பு செய்து விடுவார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க நேரிடும். தொழிலாளர்களின் நலன்கள் முழுவதுமாக புறக்கணிக்கப்படும். எனவே, ஐசிஎஃப் நிறுவனத்தை, எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார்மயம் ஆக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.அதற்கு, உலகத்திலேயே இதுபோன்ற தொழிற்சாலைகள், ஒன்பது நாடுகளில் மட்டும்தான் இருக்கின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும், தனியாரிடம் கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் உறுதிமொழி அளித்தார். இந்த செய்தியை சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிலாளர்களுக்கு நீங்கள் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் கூறியதாக மதிமுகவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad