இப்போது புரிகிறதா? ஆரோக்கிய சேதுவை ஏன் பயன்படுத்த சொன்னாங்கன்னு - சித்தார்த் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

இப்போது புரிகிறதா? ஆரோக்கிய சேதுவை ஏன் பயன்படுத்த சொன்னாங்கன்னு - சித்தார்த்

இப்போது புரிகிறதா? ஆரோக்கிய சேதுவை ஏன் பயன்படுத்த சொன்னாங்கன்னு - சித்தார்த்


இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நாடளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் எதிரொலியாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர்களை உளவு பார்ப்பதாக எதிர்கட்சி தரப்பு எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசு பெகாஸஸ் மென்பொருள் மூலம் யாரையும் உளவு பார்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம் அளித்தார்.

இருப்பினும், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை தேவை என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளது. பெகாஸஸ் மென்பொருள் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்த பின்னரும் இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இது தொடர்பாக விவாதங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர்

சித்தார்த் இதுகுறித்து ட்வீட்டியிட்டியிருப்பது கவனம் பெற்றுள்ளது. அவரது பதிவில், ''ஆரோக்கிய சேது போன்ற நம்பிக்கையற்ற செயலியை பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு ஏன் கட்டாயப்படுத்தியது என்று இப்போது புரிகிறதா?''

'அவர்கள் பொய் பேசுவார்கள்'.
அவர்கள் உளவு பார்க்கிறார்கள்.
ஏன் என்று கேட்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்'

என இவ்வாறு சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

மேலும், பெகாஸஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த கிஷோர், அசோக் லவசா, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad