முதலில் ஆரம்பப் பள்ளிகளை தொடங்க திட்டம்? ஐசிஎம்ஆர் பரிந்துரை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

முதலில் ஆரம்பப் பள்ளிகளை தொடங்க திட்டம்? ஐசிஎம்ஆர் பரிந்துரை!

முதலில் ஆரம்பப் பள்ளிகளை தொடங்க திட்டம்? ஐசிஎம்ஆர் பரிந்துரை!

கொரொனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் மிகுந்த உளச் சோர்வுக்கு ஆளாகியுள்ளனர். ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டாலும் பெரும்பாலான மாணவர்கள் இதில் கலந்துகொள்ளாத சூழலே நிலவுகிறது.
கல்வி ஒரு பக்கம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே அடைந்து கிடப்பது மாணவர்களின் உடல், உள நலத்தை பாதிப்படையைச் செய்வதாக குற்றச் சாட்டுகள் எழுகின்றன.

கொரோனா இரண்டாவது அலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல மாநிலங்கள் பள்ளிகளைத் திறந்து மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவ வல்லுநர்களிடம் கருத்து கேட்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா, சுகாதார அமைச்சக கூட்டத்தில் பேசும்போது, "பெரியவர்களை விட குழந்தைகள் மிகவும் திறம்பட வைரஸ் தொற்றுகளை கையாள முடியும் என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. 4ஆவது தேசிய செரோ ஆய்வில், குழந்தைகளிடம் பெரியவர்களை போலவே ஆன்டிபாடிகள் அளவை உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

தற்போதைய சூழலில், முதலில் தொடக்கப் பள்ளிகளை திறப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். பள்ளிகளில் உதவி பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும். சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா முதல், இரண்டாவது அலையின் போதும் தொடக்கப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வந்தன. தற்போதும் தொடக்க பள்ளிகள் செயல்படுகின்றன" எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad