கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி தகவல்!

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி தகவல்!


சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா, அந்த கல்லூரியின் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவின் முடிவில், கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழகத்தில் பொறியியல் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad