'ஜெ' உதிர்த்த முத்து... ஆடு மேய்க்கும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ..! இப்படியும் ஒரு அரசியல்வாதி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

'ஜெ' உதிர்த்த முத்து... ஆடு மேய்க்கும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ..! இப்படியும் ஒரு அரசியல்வாதி

'ஜெ' உதிர்த்த முத்து... ஆடு மேய்க்கும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ..! இப்படியும் ஒரு அரசியல்வாதி



கடந்த 2003 இல் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாமாகா எம்எல்ஏவாக இருந்த எஸ்எஸ். மணிநாடர் காலமானதையடுத்து பிப்ரவரியில்இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சாத்தான்குளம் தனி சட்டமன்றத் தொகுதியாக இருந்த நிலையில், திமுகவும், பாஜகவும் தேர்தலை புறக்கணித்தன. ஆனால், மறைமுகமாக இரு கட்சிகளும் அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் ஆதரவு திரட்டியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அங்கு காங்கிரசுக்கும், அதிமுகவுக்கும் இடையே இரு முனைப்போட்டி நிலவியது. அந்த தொகுதியில் வேட்பாளர் யாரென தெரியாமல் சுவரில் கட்சிசின்னம் வரைந்து கொண்டிருந்த தீவிர அதிமுக தொண்டராக இருந்த 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த விவசாயி நீலமேகவர்ணத்தை வேட்பாளராக நிறுத்தினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

தொடர்ந்து அவருக்காக 7 நாட்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு நீலமேகவர்ணத்தை வெற்றி பெற செய்தார் ஜெயலலிதா. ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு, தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி கலைக்கப்பட்டு, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரால் மீண்டும் தேர்தலில் நிற்க முடியவில்லை.


ஜெயலலிதா மறைந்த பின்னர் முழுவதுமாக மறக்கப்பட்ட நீலமேகவர்ணம், தற்போது ஆடு மேய்த்துக்கொண்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு கட்சியில் கிளை செயலாளராக இருப்பவர்களும் கார், வீடு, சொத்து என செட்டில் ஆகிவிடும் சூழலில் மிக பெரிய கட்சியின் எம்எல்எல்வாக இருந்தவர் ஆடு மேய்த்தும், விவசாயம் பார்த்தும் எளியாமையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதும் கவனிக்கத்தக்கது. நீலமேகவர்ணம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது எப்படி இருந்தாரோ அந்த நிலைக்குத்தான் இப்போதும் தள்ளப்பட்டுள்ளார்.


தேர்தலுக்கு முன்பு வரை பஜாஜ் எம்ஐடி பைக்கை வைத்திருந்த நீலமேகவர்ணம், மக்கள் பணியை ஆற்ற சென்று வருவதற்கு ஜெயலலிதாவால் குவாலிஸ் கார் பரிசாக பெற்றுள்ளார். ஆனால், பதவியில் இருந்து வந்ததும் மீண்டும் அந்த காரை விற்றுவிட்டு, பழைய பைக்கில் சுற்றி வருகிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், '' வருடத்தில் 4 மாதங்கள் வரை

கருப்பட்டி உற்பத்தி செய்து வருகிறேன். மற்ற நாட்களில் விவசாயம்தான் கைகொடுக்கிறது. இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களும், இனி வரவுள்ள சட்ட மன்ற உறுப்பினர்களும் எளிமையாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும்'' என்று கண்ணீர்மல்க அவர் கோரிக்கை வைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad