ஒன்றிய அமைச்சருடன் பேசியது என்ன? துரைமுருகன் விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

ஒன்றிய அமைச்சருடன் பேசியது என்ன? துரைமுருகன் விளக்கம்!

ஒன்றிய அமைச்சருடன் பேசியது என்ன? துரைமுருகன் விளக்கம்!



காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு துணை போகக் கூடாது என வலியுறுத்தியதாக, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் இடையேயான மேகதாது அணை பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. அணையை கட்டியே தீருவோம் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கும் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா, இன்று மாலை, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். இதற்காக, சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தி.மு.க.,வைச் சேர்ந்த, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான 13 பேர் கொண்ட அனைத்துக் கட்சி குழு, இன்று பிற்பகல், ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்தது.

அப்போது, மேகதாது அணையால் தமிழகத்துக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஒன்றிய அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் நகலும் ஒன்றிய அமைச்சரிடம் வழங்கப்பட்டது.


இந்த சந்திப்புக்கு பிறகு, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு துணை போகக் கூடாது என வலியுறுத்தினோம். 45 நிமிடத்திற்கும்
மேலாக ஒன்றிய அமைச்சருடன் பேசினோம். மேகதாது அணை கட்ட காவிரி பாயும் அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பும் தேவை என்பதை வலியுறுத்தினோம்.

அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை என ஒன்றிய அமைச்சர்
தெரிவித்தார். மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை என, ஒன்றிய அமைச்சர் உறுதிப்படத் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad