டாஸ்மாக் பிரியர்களுக்கு அதிர்ச்சி; கூடிய சீக்கிரம் நடக்கப் போகுதாம்!
தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லரை மதுபான விற்பனையை நடத்தி வருகிறது. மது வகைகள் மீதான ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. அரசுக்கு எப்போதும் லாபம் ஈட்டும் வியாபாரமாக இருந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் ஊரடங்கு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
டாஸ்மாக் கடைகள் மூடல்
திமுக அரசு பொறுப்பேற்றதை அடுத்து கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக அரசுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி வருவாய் பாதித்தது. இதனை ஈடு செய்யும் வகையில் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டது. இருப்பினும் ஜூன் 14ஆம் தேதி முதல் நோய்த்தொற்று குறைந்த மாவட்டங்களில்
படுஜோராக நடக்கும் விற்பனை
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போது மதுபானங்களின் விலை உயர்த்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரேமாதிரியான தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதுவரை மதுபானங்களின் விலை உயர்த்தப்படவில்லை.
மதுபான விலை உயர்வு
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது குடிமகன்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதேபோல் தமிழகத்திலும் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு
பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. எனவே பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக விலை உயர்வு அமலுக்கு வரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment