ஒரு மனுஷன் இறந்தால் இப்படித் தான் கிண்டலடிப்பதா?: பார்த்திபனை திட்டும் நெட்டிசன்ஸ் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

ஒரு மனுஷன் இறந்தால் இப்படித் தான் கிண்டலடிப்பதா?: பார்த்திபனை திட்டும் நெட்டிசன்ஸ்

ஒரு மனுஷன் இறந்தால் இப்படித் தான் கிண்டலடிப்பதா?: பார்த்திபனை திட்டும் நெட்டிசன்ஸ்

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 98. திலீப் குமார் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில்
இரங்கல் தெரிவித்தனர்.

திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்தார்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் திலீப் குமார் பற்றி போட்ட ட்வீட் சமூக வலைதளவாசிகளை எரிச்சல் அடைய செய்துள்ளது.

பார்த்திபன் எதையும் வித்தியாசமாக செய்ய நினைப்பவர். இந்நிலையில் திலீப் குமாரின் பெயரை சற்று மாற்றி diRIP kumar என்று ட்வீட் செய்தார்.அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,


உங்கள் எதுகை மோனையில தீய வைக்க. இதற்கு பெயர் கிரியேட்டிவிட்டி கிடையாது ப்ரோ. ஒருவர் இறந்தபோது இப்படி எல்லாம் செய்யக் கூடாது.

No comments:

Post a Comment

Post Top Ad