STR ஒரு வாரத்திற்குள் 10 மில்லியன்: புது சாதனை படைத்த சிம்பு, கொண்டாடும் ரசிகாஸ்
சிம்பு அங்கிள் மாதிரி இருக்கிறார், அவரால் குனிந்து சாப்பிடக் கூட முடியவில்லை, கெரியர் ஓவர் என்று பலரும் விமர்சித்தார்கள். இந்நிலையில் தான் சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து சின்ன பையன் மாதிரி ஆகிவிட்டார்.
எடையை குறைத்தது மட்டும் அல்லாமல் மது அருந்துவதையும் நிறுத்திவிட்டார். மேலும் மாமிசம் சாப்பிடுவதும் இல்லை. கடந்த ஆண்டு லாக்டவுனின்போது சிம்பு மாமிசம் சமைத்த வீடியோ வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில் சிம்பு லைட்டா ஒல்லியாக இருந்ததை பார்த்தே ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். இந்நிலையில் சிம்பு நன்றாக ஒல்லியாகி க்ளீன் ஷேவ் செய்து பன்னீர் மஸ்ரூம் சமைத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ 6 நாட்களுக்கு முன்பு வெளியானது.
அந்த வீடியோவில் சிம்பு சும்மா ஸ்டைலாக, ஹேன்ட்சமாக இருப்பதை பார்த்து அவரின் ரசிகர்கள் மட்டும் இல்லை அனைத்து ரசிகர்களும் வியந்தார்கள். சிம்புவின் லேட்டஸ்ட் லுக் வைரலானது.
இந்நிலையில் சிம்பு சைவம் சமைத்த வீடியோவுக்கு ஒரு வாரத்திற்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் கிடைத்திருக்கிறது. ஒரு வீடியோ வெளியாகி ஒரு வாரத்திற்குள் 10 மில்லியன் வியூஸ் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் சிம்பு.
No comments:
Post a Comment