சசிகலாவுக்கு மாஃபா கன்டீஷன்: இவங்களை ஒரு தடவை மீட் பண்ணிடுங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

சசிகலாவுக்கு மாஃபா கன்டீஷன்: இவங்களை ஒரு தடவை மீட் பண்ணிடுங்க!

சசிகலாவுக்கு மாஃபா கன்டீஷன்: இவங்களை ஒரு தடவை மீட் பண்ணிடுங்க!

திமுக தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி அதிமுகவினர் இன்று பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், மாஃபா பாண்டியராஜன் தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொணடனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாஃபா பாண்டியராஜனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக சசிகலா ஆடியோ வெளியிட்டு அதிமுகவை கைப்பற்றுவேன் என பேசிவருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “கட்சியை மீட்டெடுக்க வேண்டும் எனக்கூறும் சசிகலா வார்த்தை தேவையற்றது. இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் நல்ல மீட்டுருவாக்கம் செய்துள்ளனர். அதிமுகவில் தற்போது வேக்கன்ஸி இல்லை. சசிகலா அதிமுகவில் இணைய வேண்டுமென்றால் இபிஎஸ்- ஓபிஎஸ் இருவரையும் சந்தித்து பேசவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

திமுகவிற்கு மாற்று பாஜக என அண்ணாமலை பேசிவரும் நிலையில் அது குறித்து பேசும் போது, “தமிழ்நாட்டின் அரசியல் திமுக - அதிமுக என்ற அச்சில்தான் சுழலும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திமுகவிற்கு மாற்று பாஜகதான் என்று அக்கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணாமலை பேசியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவின் வலிமை திமுகவிற்கே தெரியும். அதிமுக இபிஎஸ்- ஓபிஎஸ் தலைமையில் உயிர்ப்புடன் இருக்கிறது. வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் திரணற்ற ஆட்சிக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள். அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்' என்றார்.

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் எம்ஜிஆரையும அவரது ரசிகர்களையும் உண்மைக்கு மாறாக சித்தரித்திருப்பது வருத்தம் அளிப்பதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad