தமிழக மக்களுக்கு இலவச திட்டம்; தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

தமிழக மக்களுக்கு இலவச திட்டம்; தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக மக்களுக்கு இலவச திட்டம்; தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசு சார்பில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டு கொள்ளும் வசதி இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, சென்னை காவேரி மருத்துவமனையில் இந்திய தொழிற் கூட்டமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள்

இலவச கோவிட் தடுப்பூசி

மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியின் (Corporate Social Responsibility Fund) மூலம் நடத்தும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் என்.எழிலன்

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மற்றும் த.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ்.மனீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிதி வழங்கிய தொழிற் கூட்டமைப்பு

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் அவர்களிடம், இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இந்திய தொழிற் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் சந்திரகுமார் அவர்கள், இந்திய தொழிற் கூட்டமைப்பின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், அடையாறு ஆனந்தபவன் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.டி. சீனிவாச ராஜா

அவர்கள் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்கள். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளும் அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் தற்போது வரை அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களின் மூலம் 2,15,17,446 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad