உடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே செய்யலாம் சோப்..!
தேவையான பொருட்கள்:-
வேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
துளசி – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
எலுமிச்சை தோல் – ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
டீ ட்ரி ஆயில் – 10 -13 துளிகள்
Roots D Botanica Ultra Clear Melt And Pour Soap Base – சிறிதளவு
Homemade Skin Whitening Soap in Tamil – செய்முறை:-
ஒரு மிக்சி ஜரினை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் சுத்தம் செய்த வேப்பிலை மற்றும் துளசியை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடிதாக அரைக்க வேண்டும்.
பின் அரைத்த இந்த கலவையை ஒரு சுத்தமான பவுலில் எடுத்து கொள்ளுங்கள். பின் இதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், துருவிய எலுமிச்சை தோல் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் மற்றும் 10 – 13 துளிகள் டீ ட்ரி ஆயில் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் மேலே படத்தில் காட்டியுள்ளது போல் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி, மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு Roots D Botanica Ultra Clear Melt And Pour Soap Base-ஐ சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அந்த பாத்திரத்தில் சேர்த்து நன்றாக உருக்க வேண்டும். இந்த Ultra Clear Melt And Pour Soap அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் விற்பனை செய்யப்படுகிறது எனவே அங்கு ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.
Ultra Clear Melt And Pour Soap நன்றாக கரைந்ததும் அரைத்து வைத்துள்ள வேப்பிலை கலவையினை இதனுடன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கிளறிவிடவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து மேல் காட்டப்பட்டுள்ளது போல் தங்களிடம் ஏதாவது ட்ரே இருந்தால் அவற்றில் தாங்கள் தயாரித்து வைத்துள்ள சோப் கலவையினை ஊற்றுங்கள். பின் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்.
பிறகு ட்ரேயில் இருந்து நீம் சோப்பினை தனியாக எடுத்து சருமத்திற்கு பயன்படுத்தலாம். இந்த நீம் சோப் முகத்தில் உள்ள பருக்களை நீக்குவதோடு மீண்டும் முகத்தில் பருக்கள் வருவதை அனுமதிக்காது, அதேபோல் பருக்களினால் ஏற்படும் தழும்புகளை மறைய செய்யும். மேலும் சருமத்தை மென்மையாகவும் பொலிவுடனும் வைத்து கொள்ளவும்.
No comments:
Post a Comment