தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்!



\கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அனுமதி மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் 9, 10, 11, 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அனுமதி மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் 9, 10, 11, 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

தொடர்ந்து, ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை. தனியார் பள்ளிகளில் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதனிடையே, 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம், 2021-22ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ளது. கொரோனா இரண்டாவது அலையும் குறைந்து வருவதால் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சுகாதாரத்துறையினர், பெற்றோர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அண்டை மாநிலமான புதுச்சேரியில், ஜூலை 16 முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு முழுமையான அளவு பாடங்களை நடத்த முடியவில்லை. எனவே, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை அன்பில் மகேஷை அக்கூட்டமைப்பின் தலைவர் இளங்கோ தலைமையில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதன்பின்னர், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad