மாஜி அமைச்சர்களை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்? ஓ.. இதுதான் காரணமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

மாஜி அமைச்சர்களை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்? ஓ.. இதுதான் காரணமா?

மாஜி அமைச்சர்களை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்? ஓ.. இதுதான் காரணமா?


அதிமுக ஆட்சியிலிருந்த போது அப்போதைய அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அதற்கான ஆதாரங்களைத் திரட்டி ஆளுநர் மாளிகைக்கு சென்றார் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தேர்தல் அறிக்கையில் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என கூறினார் ஸ்டாலின். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்தது. வந்த வேகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கந்தசாமி ஐபிஎஸ்ஸை கொண்டு வந்தார் ஸ்டாலின்.

'அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுப்பதற்காகவே கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அமித்ஷாவையே உள்ளே தள்ளியவர் இவர்களை விடுவாரா' என்றும் பேசப்பட்டது. ஆனால் அப்படியான நடவடிக்கைகள் எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வந்த நிலையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. கொரோனா குறைந்த பின்னர் மாஜி அமைச்சர்களின் ஊழல் வெளிச்சத்துக்கு வரும் என்று கூறப்பட்டது. கொரோனாவும் குறைந்து தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. பின்னர் ஏன் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுகிறது.

இது குறித்து விசாரிக்கும் போது முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. திமுக தற்போது கொங்கு மண்டலத்தை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. செல்வாக்குள்ள பிற கட்சி பிரமுகர்களை இழுத்துவரும் வேலைதான் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக தான் அதிகமாக குறிவைக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைமையால் ஓரங்கட்டப்பட்டவர்கள், ஓபிஎஸ் - இபிஎஸ் பஞ்சாயத்தில் அலைக்கழிக்கப்பட்டவர்கள், பதவி ஆசை எட்டிப்பார்ப்பவர்கள் என பலவிதமான ஆள்கள் குறிவைக்கப்படுகின்றனர். இன்னும் பலர் தாங்களாகவே ஸ்டாலினிடம் வெள்ளைக் கொடி காட்டி சரண்டர் ஆவார்கள் என்கிறார்கள். அதாவது ஊழல் புகாரில் சிக்கியிருப்பவர்கள் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக திமுகவில் ஐக்கியமாக முயற்சிப்பதாக கூறுகிறார்கள். திமுகவும் இதை ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்ற ஒரு தகவலும் உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்குள் இந்த ஆள் பிடிக்கும் பணி முடிவுக்கு வரும் என்கிறார்கள். அதன்பின்னர் தேர்தலை சந்திக்கும் போது கட்டாயம் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும். அதன்பின்னர் எஞ்சியுள்ளவர்கள் மீது கைது நடவடிக்கை நடைபெறும் என ஆருடம் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad