கர்நாடகாவுக்கு எதிராக ஒன்றுதிரண்ட தமிழக அரசியல் கட்சிகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

கர்நாடகாவுக்கு எதிராக ஒன்றுதிரண்ட தமிழக அரசியல் கட்சிகள்

கர்நாடகாவுக்கு எதிராக ஒன்றுதிரண்ட தமிழக அரசியல் கட்சிகள்


காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு எனும் பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அதற்கு மறுநாளே, கர்நாடகாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் முதல்வரான எடியூரப்பா, மேகதாது திட்டம் எங்களுக்கு முக்கியமானது. மத்திய அரசு அனுமதியை பெற்று, அனுமதி அளித்ததும் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார். இதற்கு தமிழ்நாடு கடுமையாக எதிர்வினையாற்றியது.

இந்த நிலையில், மேகதேது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:


தீர்மானம் 1

‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது.


தீர்மானம் 2

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

தீர்மானம் 3

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது’ என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad