ஜிகா வைரஸுக்கு தமிழ்நாட்டில் நோ எண்ட்ரி: அமைச்சர் சுப்பிரமணியன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

ஜிகா வைரஸுக்கு தமிழ்நாட்டில் நோ எண்ட்ரி: அமைச்சர் சுப்பிரமணியன்

ஜிகா வைரஸுக்கு தமிழ்நாட்டில் நோ எண்ட்ரி: அமைச்சர் சுப்பிரமணியன்


கேரளாவில் இருந்து பேருந்து மற்றும் ரயில் மூலம் சென்னைக்கு வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், கே.என் நேரு ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்திற்கு தடையின்றி தடுப்பூசி வந்துகொண்டிருக்கிறது. அதனடிப்படையில் தமிழகத்திற்கு தற்போது வரையிலும் ஒரு கோடியே 1.62 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசின் கையிருப்பில் 7 லட்சத்து 80 ஆயிரம் வரை தடுப்பூசிகள் இருக்கின்றன” என்றார்.

தொடர்ந்து ஜிகா வைரஸ் குறித்து பேசிய அவர், “ஜிகா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் தமிழகமெங்கும் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது. கேரளாவில் இதுவரை 18 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்ற தகவல் கிடைத்துள்ளது. கேரளாவும் தமிழ்நாடும் சந்திக்கக்கூடிய எல்லையோரங்களில் இருக்கக்கூடிய 2660 வீடுகளில் வீடுகள்தோறும் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் தற்போது வரை யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.



“அதேபோல் தமிழகத்தின் நகர்ப்புறங்களில், பேரூராட்சிகளில் இதேபோல மாதிரியான சோதனைகள் எடுத்து ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேரளாவில் இருந்து ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாக தமிழகம் வரும் மக்களுக்கும் இம்மாதிரியான சோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி கடந்த நான்கைந்து நாட்களாகவே நடந்து கொண்டு வருகிறது.மேலும், படுக்கைப் புண் நோய் தொடர்பான சிகிச்சைகளுக்கு உரிய ஆவண செய்ய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும். மேலும் அது சார்ந்த நிவாரணம் மற்றும் சிகிச்சைக்கான வேறு தேவைகளையும் மருத்துவ நிர்வாகங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படும்.

கருப்பு பூஞ்சை நோயால் தமிழகம் முழுவதும் 3929 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக 7000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை நோய்க்கு தலா 500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது” என்றார்.


No comments:

Post a Comment

Post Top Ad