என்ன சொல்றீங்க, சென்னையில் இப்படியொரு ஆச்சரியமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

என்ன சொல்றீங்க, சென்னையில் இப்படியொரு ஆச்சரியமா?

என்ன சொல்றீங்க, சென்னையில் இப்படியொரு ஆச்சரியமா?


தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்புகள் சரிந்து வருகின்றன. இதன்மூலம் கோவிட்-19 இரண்டாவது அலை விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் புதிதாக 2,775 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்த பாதிப்பில் 40 சதவீதம் மேற்கு மண்டலத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

கொரோனா புதிய பாதிப்புகள்

அதிகபட்சமாக கோவையில் 298 பேருக்கும், ஈரோட்டில் 198 பேருக்கும், சேலத்தில் 175 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,188 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 47 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்புகள் 33,418ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா (1,25,878), கர்நாடகா (35,835) ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பலி எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு (33,418) உள்ளது.
கொரோனா மரணமே இல்லை

மாநிலத்தின் உயிரிழப்பு விகிதம் 1.3 சதவீதமாகவே இருப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது. நேற்று 1,48,182 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 85,400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் வைரஸ் பாதிப்பின் பாசிடிவ் விகிதம் 1.9 சதவீதமாக காணப்படுகிறது. இந்நிலையில் 139 நாட்களுக்கு பின்னர் சென்னையில் நேற்று ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படவில்லை.

குணமாகும் விகிதம் அதிகரிப்பு

இதேபோல் 19 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை. புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை சென்னையில் (171) வேகமாக குறைந்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இதேபோன்ற நிலை திருச்சி (108), மதுரை (35) ஆகிய முக்கிய நகரங்களிலும் காணப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad