மதுரை கலைஞர் பிரம்மாண்ட நூலகத்தால் பென்னிகுக் இல்லத்திற்கு ஆபத்தா?: விவசாயிகள் உரிமைக் குரல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

மதுரை கலைஞர் பிரம்மாண்ட நூலகத்தால் பென்னிகுக் இல்லத்திற்கு ஆபத்தா?: விவசாயிகள் உரிமைக் குரல்!

மதுரை கலைஞர் பிரம்மாண்ட நூலகத்தால் பென்னிகுக் இல்லத்திற்கு ஆபத்தா?: விவசாயிகள் உரிமைக் குரல்!

மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதேவேளை இந்த கலைஞர் நினைவு நூலகம் கட்டவுள்ள இடத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிகுக் வாழ்ந்த இல்லம் உள்ளதால் கர்னல் பென்னிகுக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி விட்டு கலைஞர் நினைவு நூலகம் கட்ட கூடாது எனப் பெரியார்-வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியார்-வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ராமன் கூறுகையில், “5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் கர்னல் பென்னிகுக், கரிகால சோழன் காவேரியில் கல்லணை கட்டிய போல் முல்லைப் பெரியாற்றில் அணை கட்டியவர்.

பென்னிகுக், மதுரையில் பென்னிகுக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி நூலகம் கட்டும் முடிவைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். பென்னிகுக் இல்லத்தை அகற்றும் முடிவைக் கைவிடவில்லை என்றால் 5 மாவட்ட விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்” எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad