ஓபிஎஸ், இபிஎஸ்ஸை காக்கவைத்த அமித் ஷா: டெல்லி வரை எதிரொலிக்கும் சசிகலா விவகாரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

ஓபிஎஸ், இபிஎஸ்ஸை காக்கவைத்த அமித் ஷா: டெல்லி வரை எதிரொலிக்கும் சசிகலா விவகாரம்!

ஓபிஎஸ், இபிஎஸ்ஸை காக்கவைத்த அமித் ஷா: டெல்லி வரை எதிரொலிக்கும் சசிகலா விவகாரம்!

ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன் தினம் (ஜூலை 25) காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து அன்று இரவு எடப்பாடி பழனிசாமியும், எஸ்.பி.வேலுமணியும் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
நேற்று (ஜூலை 26) காலை நாடாளுமன்ற வளாகத்தில் பன்னீர் செல்வம்,
எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல அவரை சந்தித்தோம். தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள், கோதாவரி காவிரி இணைப்பு, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு ஆகிய விஷயங்களை பிரதமரிடம் எடுத்துச் சொன்னோம்” என்று கூறினார்.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சசிகலா கேட்டிருக்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார். ஓபிஎஸ்ஸும் அப்போது வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை அமித் ஷாவை சந்திப்பதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் காத்திருந்தனர். ஏற்கனவே அமித் ஷா நேரம் கொடுத்திருந்தபோதும் கர்நாடகாவில் பாஜக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா, மிசோரம்- அஸ்ஸாம் மாநிலங்களின் எல்லை பிரச்சினை போன்றவற்றால் சில முக்கிய ஆலோசனைகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அதனால் அமித் ஷாவின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவில்லை.
இந்நிலையில் இன்று (ஜூலை 27) காலை எடப்பாடி பழனிசாமி இணை அமைச்சர் முருகனை சந்தித்தார். தொடர்ந்து அமித் ஷா அலுவலகத்தில் இருந்து இன்று காலை அழைப்பு வர ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அமித் ஷாவை நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் சந்தித்தனர்,
தடுப்பூசி, மேகதாது அணை என பல விஷயங்களை கூறினாலும் சசிகலா விவகாரம் பற்றிதான் மோடியுடன் ஆலோசித்ததாக அதிமுக வடடாரங்களில் கூறப்பட்டது. இன்று அமித் ஷாவுடன் நடந்த ஆலோசனையிலும் அது குறித்தே பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad