ஆன்மிக அன்பர்களுக்கு செம ஹேப்பி நியூஸ் சொன்ன அறநிலையத் துறை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

ஆன்மிக அன்பர்களுக்கு செம ஹேப்பி நியூஸ் சொன்ன அறநிலையத் துறை!

ஆன்மிக அன்பர்களுக்கு செம ஹேப்பி நியூஸ் சொன்ன அறநிலையத் துறை!

அறநிலையத்துறையின்கீழ் உள்ள திருக்கோயில்களில் ஆர்வம் உள்ள தன்னார்வல குழுக்கள் மூலமாக உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆக சிறந்த பணியை எளிமைப்படுத்தும் வகையில், இணையவழி மூலம் பதிவு செய்யும் வசதி www.hrce.tn.gov.in தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்ய விருப்பம் உள்ள நபர்கள் எளிய முறையில் தங்களுக்கு உகந்த தேதி, நேரம், செய்யும் பணியினைத் தாங்களே தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து உரிய அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம்.

உழவார பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களை https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம் என்று அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad