சீமான் செல்போனில் பெகாசஸ் மென்பொருள்..! வெளியான அதிர்ச்சி தகவல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

சீமான் செல்போனில் பெகாசஸ் மென்பொருள்..! வெளியான அதிர்ச்சி தகவல்

சீமான் செல்போனில் பெகாசஸ் மென்பொருள்..! வெளியான அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலின் பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் என ஏறக்குறைய 1000 பேருடைய செல்போன்களை கண்காணித்து வந்ததாக பிரபல செய்தி நிறுவனங்கள் அம்பலப்படுத்தின.
இந்த மென்பொருள் மூலம், ஒருவரது தொலைபேசியில் அவருக்குத் தெரியாமலேயே பதிவேற்றம் செய்து அந்தத் தொலைபேசியை வெளியிலிருந்து இயக்க முடியும் என்றும் தொலைபேசியில் இருக்கும் மைக்ரோபோன், கேமிரா முதலானவற்றையும் அவருக்குத் தெரியாமலேயே செயல்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க, எதிர்கட்சித் தலைவர்களை உளவு பார்ப்பதாக எதிர்கட்சி தரப்பு எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, மத்திய அரசு பெகாஸஸ் மென்பொருள் மூலம் யாரையும் உளவு பார்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம் அளித்தார். இதனிடையே, பெகாஸஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த கிஷோர், அசோக் லவசா மட்டுமின்றி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரின் செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டதாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்த உண்மைகளைக் கண்டறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்க மத்திய அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த சூழலில், பெகாசஸ் மென்பொருள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, த.பெ. திராவிடர் கழகத்தின் கு. ராமகிருஷ்ணன், திராவிடர் கழகம் குமரேசன், ஆகியோரது தொலைபேசிகளில் இருந்ததாக 'தி வயர்' இணைய இதழில் அம்பலமாகியுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad