ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு: தமிழக அரசின் புதிய ஆணை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு: தமிழக அரசின் புதிய ஆணை

ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு: தமிழக அரசின் புதிய ஆணை

தமிழகத்தில் 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாட்டில் பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின் பள்ளிகளை திறப்பதை குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 2018 இல் இருந்து 2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்த தற்காலிக ஆசிரியர்களின் பணியிடங்களை மேலும் மூன்று வருடங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அது தொடர்பாக வெளியான அரசாணையில், '' கடந்த 2011-12ஆம் கல்வியாண்டில், 2 ஆயிரத்து 64 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 344 உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 408 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 888 ஆசிரியர் அல்லாத பணியிடங்ள் என ஒட்டுமொத்தமாக 3 ஆயிரத்து 296 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad