ப்ளீஸ் இதை பண்ணுங்க ஸ்டாலின்: மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் ஓபிஎஸ் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

ப்ளீஸ் இதை பண்ணுங்க ஸ்டாலின்: மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் ஓபிஎஸ்

ப்ளீஸ் இதை பண்ணுங்க ஸ்டாலின்: மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் ஓபிஎஸ்


தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த மாதம் 30ஆம் தேதி தமிழ்நாடு
மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் அப்போதிருந்து, இப்போது வரை தொடர்ந்து இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தாக்குவதாகவும், மீனவர்களையும், அவர்களின் வலைகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன” என பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து நிலவுவதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே

தமிழ்நாடு முதலமைச்சர், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படையின் தொல்லை இல்லாமல் மீனவர்கள் மீன் பிடிக்க உதவி செய்ய வேண்டும். மேலும் தேவைப்பட்டால் மத்திய வெளியுறவுத்துறையின் உதவியைப் பெற்று மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad