ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முயலும் மோடி: திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு!
இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ எனும் நிறுவனத்தின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகெங்கும் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்களின் செல்போன் தரவுகள் ஒட்டுக் கேட்கப்பட்டு அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய நிறுவனத்தால் உலகெங்கிலும் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் 50,000 தொலைபேசி எண்களின் பட்டியல் சகிந்துள்ளது. இந்தப் பட்டியலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மே பதினேழு இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்ற உளவுச் செயலியின் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அரசுகளால் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்ற பட்டியலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் இருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தோழர் திருமுருகன் காந்தியின் தரவுகளை சேகரித்து அவரை முடக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்திய ஒன்றிய மோடி அரசு ஈடுபட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தோழர் திருமுருகன் காந்தி உட்பட முற்போக்கு செயற்பாட்டாளர்களை, பத்திரிக்கையாளர்களை முடக்கி, ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயலும் பாஜக மோடி அரசை மே பதினேழு இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ. (NSO) என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற உளவு செயலியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகள் அந்நாட்டின் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டு, வாட்சப் தகவல்கள் உட்பட மொபைல் தரவுகள் அனைத்தையும் சேகரித்துள்ளன என உலகின் முன்னணி பத்திரிக்கைகள் பல நேற்று (ஜூலை 18 இரவு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 40 பத்திரிக்கையாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டிருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று தான் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
No comments:
Post a Comment