"நீட்" தேர்வுக்கு அ.தி.மு.க, தான் காரணம்: அமைச்சர் மா.சு குற்றச்சாட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

"நீட்" தேர்வுக்கு அ.தி.மு.க, தான் காரணம்: அமைச்சர் மா.சு குற்றச்சாட்டு!

"நீட்" தேர்வுக்கு அ.தி.மு.க, தான் காரணம்: அமைச்சர் மா.சு குற்றச்சாட்டு!


தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய அனுமதித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு தான் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை கலைஞர் நகரில் உள்ள அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், பாதுகாப்பு கவச உடையணிந்து சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

பின்னர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்குள் கீழ் கொண்டு செல்லப்படும். ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் தொடர்பாக இரு முறை பேசப்பட்டு உள்ளது. இந்த கல்லூரியை நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசே ஏற்று நடத்தும்.

தமிழகத்திற்குள் நீட் தேர்வை நுழையவிட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான். 7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு கிடைக்க காரணம், ஆளுநர் மாளிகையை தி.மு.க., முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad