ராஜினாமா செய்த அமைச்சர்கள்: அடுத்து என்ன பதவி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

ராஜினாமா செய்த அமைச்சர்கள்: அடுத்து என்ன பதவி?

ராஜினாமா செய்த அமைச்சர்கள்: அடுத்து என்ன பதவி?



பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் அமைச்சரவையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், சில மாநிலங்களில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் மாற்ற கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டது.

அதன்படி, கடந்த 7ஆம் தேதி மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பையொட்டி, மூத்த அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ் வர்தன் உள்ளிட மூத்த அமைச்சர்கள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதாவது, ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 12 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். மொத்தம் 43 அமைச்சர்கள் புதிதாகப் பொறுப்பேற்றனர்.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தாவர் சந்த் கெலாட் கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மற்றவர்களுக்கும் வேறு பல மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்படலாம் அல்லது கட்சி ரீதியிலான முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.இந்த நிலையில், மூத்த தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகிய விரைவில் பாஜகவில் உயர்ந்த பதவிகள் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேசியப் பொதுச்செயலாளர் அல்லது துணைத் தலைவர் பதவிகள் இவர்களுக்கு வழங்கப்படலாம் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad