ஸ்கூல் திறக்கலாம், நோ பிராப்ளம்: உறுதியளிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

ஸ்கூல் திறக்கலாம், நோ பிராப்ளம்: உறுதியளிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்!

ஸ்கூல் திறக்கலாம், நோ பிராப்ளம்: உறுதியளிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்!

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
பல மாநிலங்கள் பள்ளிகள், கல்லூரிகளை திறந்துள்ளன. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து பேசும் போது, “கொரோனா மூன்றாம் அலை வரக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ணம். ஒருவேளை வந்தால் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கமுடியாத சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

இந்த சூழலில் டெல்லி
எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா பள்ளிகளைத் திறக்கும் நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளிகளை படிப்படியாக திறக்க முடிவு எடுக்கலாம். முதலில் பாதிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளிகள் திறப்பினால் கொரோனா அதிகரிக்கிறது என்றால், உடனடியாக பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad