தங்க பிஸ்கட் வருவாய்; அமைச்சர் சேகர்பாபு சொன்ன பலே ஐடியா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

தங்க பிஸ்கட் வருவாய்; அமைச்சர் சேகர்பாபு சொன்ன பலே ஐடியா!

தங்க பிஸ்கட் வருவாய்; அமைச்சர் சேகர்பாபு சொன்ன பலே ஐடியா!

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இவர் அறநிலையத்துறை மட்டுமின்றி பல்வேறு வகைகளில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கோயில் அன்னதானம் இனி மருத்துவமனைகளில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கொரோனா நெருக்கடி காலத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அந்த வரிசையில் கோயில்களுக்கு வருமானம் ஈட்டும் வகையில் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.

பழமை மாறாமல் புதுப்பித்தல்

முன்னதாக சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.பி கனிமொழி, அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உதவிக்கு வரும் எச்.சி.எல்

பின்னர் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சகல வசதிகளையும் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான உதவிகளை செய்ய எச்.சி.எல் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த திட்டத்தின் இறுதி வடிவம் கிடைத்த பின் முதல்வர் அனுமதியுடன் பணிகள் தொடங்கப்படும். இதன் தொடர்ச்சியாக திருச்செந்தூர் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்றார்.

தங்க பிஸ்கட் திட்டம்

காணாமல் போன சிலைகள், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் உண்டியல் காணிக்கை, நன்கொடை பணத்தை உடனடியாக வங்கிகளில் செலுத்தி வருகின்றோம். பக்தர்கள் அளிக்கும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பொருட்களை வகைப்படுத்தி கோயில் ஆவணங்களில் பதிவு செய்து இணை ஆணையர் முன்னிலையில் அந்தந்த கோயில்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கோயில் நன்கொடை தொடர்பாக திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதாவது, கோயில் காணிக்கை நகைகளில் அரக்கு, கற்கள், மணிகள் இருக்கும். இவற்றை அகற்றி விலை உயர்ந்த கற்களை பாதுகாக்க உள்ளோம். மீதமுள்ள

தூய நகைகள் எடை நிர்ணயம் செய்யப்படும். அவை மும்பையில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்திற்கு அனுப்பப்படும். அங்கு நகைகள் அனைத்தும் 24 கேரட் தங்க பிஸ்கட்டுகளாக மாற்றப்படும். இவை சம்பந்தப்பட்ட கோயிலுக்கான தேசிய வங்கியில் தங்க வைப்பு நிதியில் வைக்கப்படும். இதன்மூலம் 2.5 சதவீதம் வட்டி வருவாய் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு வல்லுநர் குழு ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad