ஆவின் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; வரலாற்றில் இப்படி நடந்ததே இல்ல! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

ஆவின் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; வரலாற்றில் இப்படி நடந்ததே இல்ல!

ஆவின் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; வரலாற்றில் இப்படி நடந்ததே இல்ல!


தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பான ஆவினில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தொடர் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு வேண்டியவர்களை உயர் பொறுப்பில் அமர வைத்து, அதன்மூலம் கூட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆவின் நிர்வாக முறைகேடுகள்

இதன் காரணமாக லாபத்தில் இயங்கி வந்த ஆவின் நிர்வாகம் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டதாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்கள் சங்கங்கள் புகார்களை முன்வைத்தன. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால்வளத்துறை அமைச்சராக ஆவடி மு.நாசர் பதவியேற்றுக் கொண்டார். அவரிடம் ஆவின் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கூண்டோடு அதிகாரிகள் இடமாற்றம்

இந்நிலையில் ஆவின் நிர்வாகத்தில் உயர் பதவியில் உள்ள 34 அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆவின் நிர்வாக இயக்குநர் பிறப்பித்த உத்தரவில் நிர்வாகக் காரணங்களாக 34 அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய பால்வளத்துறை அமைச்சர் ஆவடி மு.நாசர்,

ராஜேந்திர பாலாஜி மீது விசாரணை

ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும் நேர்மையான நிர்வாகத்தை அளிக்கும் வகையிலும்

பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆவின் நிர்வாகம் புத்துணர்ச்சியோடு சிறப்பான முறையில் செயல்படும் என்று நம்புவதாக தெரிவித்தார். மேலும், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஆவின் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களிடம் கட்டாயப்படுத்தி பட்டாசு விற்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 23 யூனியனிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதுபற்றியும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad