மார்பக புற்றுநோய் அறிகுறிகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 3, 2021

மார்பக புற்றுநோய் அறிகுறிகள்

மார்பக புற்றுநோய் அறிகுறிகள்


ஆரம்பகால அறிகுறிகள்:

  • சருமத்தில் மாற்றம் அடையும், வீக்கம், சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
  • இரண்டு மார்பகத்தின் வடிவம், அளவு மாற்றம் பெறும். 
  • இரண்டு மார்பக காம்புகளில் அல்லது ஒரு காம்பில் மாற்றங்கள் தென்படலாம்.
  • தாய்ப்பாலைத் தவிர முலைக்காம்பில் கசிவு தன்மை ஏற்படும்.
  • மார்பகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் வலி ஏற்படும்.
  • மார்பகத்தின் உட்பகுதியில் கட்டிகள் வரும்.
  • இன்வேசிவ் மார்பக புற்றுநோய் அறிகுறிகள் (மார்பகத்தின் உள்ளே ஏற்படும் அறிகுறிகள்) எரிச்சல் அல்லது மார்பகத்தில் அரிப்பு உண்டாகும். 
  • மார்பகம் வேறு நிறத்தில் தென்படும்.
  • மார்பக வடிவில் அல்லது அளவில் அதிகரிப்பு ஏற்படுதல்.
  • மார்பகத்தை தொடும் போது கடினமாக அல்லது வெப்ப நிலையில் உள்ளது போன்று இருக்கும்.
  • மார்பக காம்புகளில் சிவப்பு நிறம் ஏற்படும்.
  • மார்பக கட்டி கடினமாகுதல்
  • சிவந்து போதல் அல்லது மார்பக சருமம் ஆரஞ்சு நிறத்தில் தோன்றுதல்.
  • சில நேரங்களில் மார்கத்தில் ஏற்படும் தொற்று பிரச்சனை காரணமாக கூட சிவந்த நிலை ஆகலாம்.
  • மார்பக காம்புகள் வீங்கி இருப்பதும் தொற்று காரணமாக இருக்கலாம்.
  • எனவே அதற்காக கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள்.
  • மார்பகத்தில் கட்டி ஏற்படும் அல்லது மார்பகம் கனமாக இருப்பது போன்று உணர்தல் மார்பகத்தின் எல்லா பகுதியும் வீக்கத்துடன் தென்படுதல்.
  • தோல் எரிச்சல் அல்லது சுறுசுறுக்கென்ற வலி மார்பகம் அல்லது மார்பக காம்புகளில் வலி ஏற்படுதல். முலைக்காம்பு உள் நோக்கி திரும்புதல். 
  • மார்பக சருமம் சிவந்து, செதிலாக அல்லது தடினமாக மாறுதல்.
  • முலைக்காம்பு பகுதியானது வெளியேற்றம் அடையும்.
  • அக்குள் பகுதியில் நிணநீர் வீக்கம்.
மார்பக குழாயில் ஏற்படும் அறிகுறி:

  • பெண்களுக்கு மார்பக குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் எந்த வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. இதனால் இதை வெகு விரைவில்  கண்டறிவது கடினம்.
  • மார்பக குழாய்களில் ஏற்படும் கட்டியை கொண்டு நீங்கள் மார்பக புற்றுநோயை அறியலாம். இல்லையென்றால் மேமோகிராம் மூலம் கண்டறியலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad