பெண் போலீஸ் மீது அதிமுக எக்ஸ் எம்எல்ஏ கார் மோதி விபத்து: சேலத்தில் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

பெண் போலீஸ் மீது அதிமுக எக்ஸ் எம்எல்ஏ கார் மோதி விபத்து: சேலத்தில் பரபரப்பு!

பெண் போலீஸ் மீது அதிமுக எக்ஸ் எம்எல்ஏ கார் மோதி விபத்து: சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி அதிமுக, முன்னாள் எம்எல்ஏவான இவர் நேற்று முன்தினம் ஆத்தூர் ரயிலடி தெரு வழியாக எல் போர்டு ஸ்டிக்கருடனிருந்த மாருதி காரை ஓட்டிச்சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த கருமந்துறை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பிரேமலதா மீது கார் மோதி இருசக்கர வாகனம் மீது கார் ஏறியபடி நின்றுள்ளது. இதில் காவலர் பிரேமலதா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனையடுத்து சின்னதம்பி காரை நிறுத்தி விட்டு அருகிலுள்ள ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்து தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து ஆத்தூரைச் சேர்ந்த ராஜா என்பவர் நான் தான் காரை ஓட்டி வந்தேன் என போலீசாரிடம் கூறியுள்ளார்.

சந்தேகம் அடைந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னதம்பி தான் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து போக்குவரத்து பிரிவு ஏட்டு சுதாகர் அளித்த புகாரின்படி

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னதம்பி மீது 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad