தனியார் பேருந்து சேவை: அரசு இந்த அறிவிப்பை எப்போது வெளியிடும்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

தனியார் பேருந்து சேவை: அரசு இந்த அறிவிப்பை எப்போது வெளியிடும்?

தனியார் பேருந்து சேவை: அரசு இந்த அறிவிப்பை எப்போது வெளியிடும்?


தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக பேருந்து சேவை தடைபட்டிருந்தன. கொரோனா பரவல் குறைந்த நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பேருந்து சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும் நிலையில் புதுச்சேரிக்கு மட்டும் இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டும் என வழிகாட்டு வழிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசுப் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. டீசல் விலை உயர்வு, சாலை வரி, இரு மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாததால் ஏற்பட்ட வருமானம் இழப்பு என பல பிரச்சினைகளில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலியில் தமிழ்நாட்டில் 100% இருக்கை வசதிகளுடன் பேருந்து இயக்கத்துக்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே தனியார் பேருந்துகளின் இயக்கம் தொடங்கும் என ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்


இது குறித்து அவர், “தமிழ்நாட்டில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் 50% பயணிகளுடன் தனியார் பேருந்துகளை இயக்குவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் தனியார் பேருந்துகளின் இயக்கம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தற்போது தனியார் பேருந்துகள் செயல்பட்டு வருகிறதுறன. தமிழகத்தில் 100% இருக்கை வசதிகளுடன் பேருந்து இயக்கத்துக்கு அனுமதியளித்த பின்னர் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா குறைந்து வருவதால் இந்த வார இறுதியில் 100 சதவீதம் பயணிகள் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad