கோவை போலீஸ் தகாத உறவுக்கு செய்த துரோகம்: பணி இழந்து சிறை செல்கிறார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

கோவை போலீஸ் தகாத உறவுக்கு செய்த துரோகம்: பணி இழந்து சிறை செல்கிறார்!

கோவை போலீஸ் தகாத உறவுக்கு செய்த துரோகம்: பணி இழந்து சிறை செல்கிறார்!கோவை, சிங்காநல்லூர் பகுதியில் கணவனைப் பிரிந்து குடியிருந்து வரும் பெண் அபிநயா. இவரும் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபனும் உறவினர்கள் ஆவார்கள்.
இவர்கள் இருவருக்கிடையே திருமணத்தை மீறிய உறவு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இரு தினங்களுக்கு முன் கடந்த 14ஆம் தேதி தகராறு ஏற்பட்டு அபிநயாவை பார்த்திபன் தாக்கியுள்ளார்.
தாக்குதலை தொடர்ந்து, கடந்த 16ஆம் தேதி இரவு சிங்காநல்லூர் உழவர் சந்தையின் சுவர் ஏறி குதித்து அங்கே அபிநயாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர் அபிநயா தந்தையின் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டப் பெண் அளித்த புகார் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபனை பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், இரு சக்கர வாகனத்தை எரித்ததாகவும் கூடுதல் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் வெளியிட்டார்.


No comments:

Post a Comment

Post Top Ad