பெண்களுக்கு இலவச பயணச்சீட்டில் மாற்றம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

பெண்களுக்கு இலவச பயணச்சீட்டில் மாற்றம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

பெண்களுக்கு இலவச பயணச்சீட்டில் மாற்றம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!


திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கொரோனா நிவாராணம் ரூ.4000, ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களை தொடங்கும் கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, கடந்த 8 ஆம் தேதி முதல் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த பயணத்தின் போது பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக குற்றச்சாடு எழுந்து வருகிறது.
இந்நிலையில் நாளை முதல் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்பதை அறிய டிக்கெட் தரப்படுவதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே நஷ்டத்திலிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கொரோனாவால் மேலும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இருப்பினும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணத்தில் திமுக அரசு இந்த சலுகையை மகளிருக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad