தேனிக்கு வந்த ஜிகா வைரஸ் வார்னிங்: உச்சக்கட்ட பதற்றம் காரணமாகத் தீவிர தடுப்பு பணி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 14, 2021

தேனிக்கு வந்த ஜிகா வைரஸ் வார்னிங்: உச்சக்கட்ட பதற்றம் காரணமாகத் தீவிர தடுப்பு பணி!

தேனிக்கு வந்த ஜிகா வைரஸ் வார்னிங்: உச்சக்கட்ட பதற்றம் காரணமாகத் தீவிர தடுப்பு பணி!


கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் உள்படக் கேரளாவில் சிலருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கேரள அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் அண்டை மாநிலமான கேரள எல்லையில் அமைந்துள்ள தேனியில் ஜிகா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்துள்ளனர். அவ்வழியாகக் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் வாகனங்களை ஆய்வு செய்து, அதில் வரும் மக்களுக்கு ஜிகா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா எனப் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்ட நபர்களைக் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு அவர்களின் ரத்தமாதிரிகள் சேகரிக்கப் படுகிறது. பின்னர்

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

குறித்த நபர்கள் பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை வீட்டில் தனிமையிலிருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். தேனி மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஜிகா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக 842 களப்பணியாளர்கள் நியமித்து பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

இது தொடர்பாக, “பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. விழிப்புணர்வுடன் செயல்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad