கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..!

கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது.
கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று வினாடிக்கு 587 கனஅடிநீர் வரத்தாக இருந்தநிலையில் இன்று வினாடிக்கு 696 கனஅடிநீர் வந்துக்கொண்டிருக்கிறது.

நேற்றைய விட இன்று 109 கனடிநீர் கூடுதலாக அதிகரித்து உள்ளநிலையில் கெலவரப்பள்ளி அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் 38.38 அடிகள் தற்போது நீர் இருப்பு வைக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 400 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் நீர் கிருஷ்ணகிரி அணையை சென்றடையும் என்பது குறிப்பிடதக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad