பேருந்து - லாரி மோதல்: 30 பேர் பலி; 74 பேர் படுகாயம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

பேருந்து - லாரி மோதல்: 30 பேர் பலி; 74 பேர் படுகாயம்!

பேருந்து - லாரி மோதல்: 30 பேர் பலி; 74 பேர் படுகாயம்!


பாகிஸ்தான் நாட்டில் பேருந்து - லாரி நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் 30 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள சியான்கோட்டில் இருந்து ராஜன்பூருக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

சியால்கோட் என்ற நகரை தாண்டி, மத்திய பாகிஸ்தானின் பிசியான தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ஒரு கன்டெய்னர் லாரி மீது பேருந்து வேகமாக மோதியது.

மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 30 பேர் உடல் நசுங்கி பலியாகினர்; 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad