அரசு அலுவலர்கள் இப்படித்தான் உட்கார வேண்டும்: அமைச்சர் போட்ட அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

அரசு அலுவலர்கள் இப்படித்தான் உட்கார வேண்டும்: அமைச்சர் போட்ட அதிரடி!

அரசு அலுவலர்கள் இப்படித்தான் உட்கார வேண்டும்: அமைச்சர் போட்ட அதிரடி!


பதிவுத்துறை அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் என பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி சமீப காலமாக சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு பல சீர்திருத்தங்களை நடைமுறை படுத்தி வருகிறார். பதிவுத்துறை செயலர் மற்றும் பதிவுத்துறை தலைவருடன் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களில் அமைச்சர் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டபோது பதிவு அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் உயர்ந்த மேடையில் அமர்ந்து பதிவு பணி செய்து வருவதால், பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்கு பதிவு சேவையினை வழங்குவது சிரமமாக உள்ளது கண்டறியப்பட்டது.

எனவே, இனிவரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவு பணியினை செய்ய வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்ட நிலையிலும் அரசுக்கு செலுத்தும் கட்டணங்கள் யாவும் இணைய வழியாகவே செலுத்தப்படுவதால் சார்பதிவாளர் பணத்தை கையாள அவசியமில்லாத நிலையிலும் இந்த

உயர் மேடைகள் தற்போது தேவையில்லை என்பதால் பதிவு அலுவலர்களின் இருக்கையினைச் சமதளத்தில் அமைத்து சுற்றியுள்ள தடுப்புகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு வெளிப்படையான சேவையினை உறுதி செய்யும் வகையில் சார்பதிவாளர்கள் தாங்கள் அமர்ந்துள்ள மேடையினை சுற்றியுள்ள தடுப்பினை உடனடியாக அகற்றி தங்கள் இருக்கையினைச் சமதளத்தில் அமைக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad