தியேட்டர் ஓனர்கள் முதல்வருடன் சந்திப்பு... விரைவில் திரையரங்குகள் திறப்பு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

தியேட்டர் ஓனர்கள் முதல்வருடன் சந்திப்பு... விரைவில் திரையரங்குகள் திறப்பு?

தியேட்டர் ஓனர்கள் முதல்வருடன் சந்திப்பு... விரைவில் திரையரங்குகள் திறப்பு?

திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சம் ரூபாய் வழங்கினர். இதனை தொடர்ந்து சந்தித்த சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியது:

திரையரங்க உரிமையாளர்களுக்கு உள்ள சிரமங்களை முதல்வரிடம் கூறினோம். இந்த அரசு, கலை துறையினருக்கு உறுதுணையாக இருக்கும் என முதல்வர் கூறினார்.

திரையரங்குகளை விரைவில் திறக்க அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். அரசு கூறும் விதிமுறைகளுக்கு உட்பட்டு திரையரங்குகளை திறக்க தயாராக இருக்கிறோம்.திரையங்கள் திறக்கப்பட்டால் தயாரிப்பாளர்கள் ஓடிடி நோக்கி செல்லமாட்டார்கள். இந்தியாவிலே மிக குறைவான கட்டணம், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வசூலிக்கப்படுகிறது. இப்போதைய கட்டணம் போதுமானதாக உள்ளது என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad