பாட புத்தகங்களில் இனிமே 'ஒன்றிய அரசு' தான்... முதல் பாலில் சிக்சர் அடித்த லியோனி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

பாட புத்தகங்களில் இனிமே 'ஒன்றிய அரசு' தான்... முதல் பாலில் சிக்சர் அடித்த லியோனி!

பாட புத்தகங்களில் இனிமே 'ஒன்றிய அரசு' தான்... முதல் பாலில் சிக்சர் அடித்த லியோனி!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி மரியாதை நிமித்தமாக முதல்வரை இன்றுசந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக வாய்ப்பளித்துள்ள முதல்வருக்கு நன்றி. எளிய மக்கள் கல்வியை சுமையாக கருதாமல் சாதாரண குழந்தைகள் விருப்பத்துடன் பாடங்களை படிக்க வேண்டும். இதில் பல புதுமைகளை படைக்க தயாராக இருக்கிறேன்.

ஒன்றிய அரசு எனும் வார்த்தையை மக்கள் சிறப்பாக பயன்படுத்த துவங்கிவிட்டனர். பள்ளி மாணவர்களுக்கு அடுத்த பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடப்படும்போதும், மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையே புத்தகங்களில் அச்சிடப்படும்.33 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருந்த எனக்கு முதல்வர் இந்த வாய்ப்பை அளித்துள்ளார். ஒரு வாரத்துக்குள் பொறுப்பேற்று கொள்வேன் என்று திண்டுக்கல் லியோனி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad