செல்போன் டவர் கிடைக்காமல் ஒரு ஊராட்சியே உயிரை பணயம் வைக்கும் சோகம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

செல்போன் டவர் கிடைக்காமல் ஒரு ஊராட்சியே உயிரை பணயம் வைக்கும் சோகம்..!

செல்போன் டவர் கிடைக்காமல் ஒரு ஊராட்சியே உயிரை பணயம் வைக்கும் சோகம்..!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்டது காளிங்காவரம் ஊராட்சி. ஒசூரிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊராட்சியில் மட்டம்பள்ளி, அக்ரகாரம்,காளிங்காவரம்,கொடித்திம்மனப்பள்ளி ஜவுக்குபள்ளம், தின்னூர், குருமூர்த்தி கொட்டாய் என 7 குக்கிராமங்கள் அமைந்துள்ளன.
2500 வீடுகளுக்கும் அதிகமாக உள்ள இந்த ஊராட்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய 1000த்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகளின்றி மாணவர்கள் வீடுகளிலேயே இருப்பதால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.
காளிங்காவரம் ஊராட்சியில் BSNL உள்ளிட்ட எந்த தொலை தொடர்பு நிறுவனங்களின் டவர்களும் இல்லாததால் மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க கைகளிலில் செல்போன், புத்தகங்களுடன் உயர்ந்த மலைபகுதிக்கும் அங்கு ஆபத்தான முறையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் டவரை தேடி அலைந்து பங்கேற்று வருகின்றனர்.

சரியான முறையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமலும், ஆன்லைன் தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் படிப்பில் கவனம் குறைந்துவிட்டதாக மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.காளிங்காவரம் ஊராட்சியில் துவக்கப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி, துணை சுகாதார நிலையம், தமிழ்நாடு கிராம வங்கி, தபால்நிலையம், மக்கள் சேவை மையம் என அரசின் அனைத்து அலுவலகங்கள் இருந்தாலும் தொலைதொடர்பு நெட்வொர்க் இல்லாததால் இணைய வசதியின்றி பயணில்லாதவாறே காட்சியளிக்கின்றன.


No comments:

Post a Comment

Post Top Ad