பிரதமர் மோடி கொடுத்த பரிசு; எந்தெந்த மாநிலங்களுக்கு ஜாக்பாட்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

பிரதமர் மோடி கொடுத்த பரிசு; எந்தெந்த மாநிலங்களுக்கு ஜாக்பாட்?

பிரதமர் மோடி கொடுத்த பரிசு; எந்தெந்த மாநிலங்களுக்கு ஜாக்பாட்?


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து அமைச்சரவையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல், சில அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகள், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருப்போர், மாற்று கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்கள் உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் இளைய வயதினருக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக 36 அமைச்சர்கள்

மேலும் அனைத்து பிராந்தியங்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையிலும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசில் அதிகபட்சமாக 81 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். நேற்றைய தினம் புதிதாக 36 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் 7 அமைச்சர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம்

எனவே மொத்தம் 43 பேர் நேற்றைய தினம் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களின் எண்ணிக்கை 53ல் இருந்து 77ஆக அதிகரித்துள்ளது. வயதானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் அமைச்சரவையின் சராசரி வயது 58ஆக குறைந்துள்ளது. முதல்முறை 16 எம்.பிக்களும், 4 முன்னாள் முதல்வர்கள்,எந்தெந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம்

மாநில அமைச்சர்களாக இருந்த 18 பேர், 39 முன்னாள் எம்.எல்.ஏக்களும் மத்திய அமைச்சர்களாக மாறியுள்ளனர். மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் இருந்து 8 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி பெற்றுள்ளனர். இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து குஜராத் 6, மேற்கு வங்கம் 4, மகாராஷ்டிரா 4, பிகார் 3, கர்நாடகா 3, மத்தியப் பிரதேசம் 2, ஒடிசா 2 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், அசாம், ஹிமாச்சல் பிரதேசம், மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad