சந்தன கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்கதான்: போதையில் வாக்குமூலம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

சந்தன கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்கதான்: போதையில் வாக்குமூலம்!

சந்தன கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்கதான்: போதையில் வாக்குமூலம்!

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் “வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்கதான்” எனக் கூறி போலீசிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் மது பிரியர்கள் கடைகள் முன் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி திறப்பை இன்று வரவேற்றனர்.

இதன் ஒரு பகுதியாகக் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அதிகமாக மது அருந்திய இருவர் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தனர்.

கருமத்தம்பட்டி காவல் நிலையத்திலும் ரகளையில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். அப்போது சாலையில் வைத்து போலீசார் அவர்களைப் பிடித்து எச்சரித்த போதும் அவர்கள் கட்டுப்படாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இவர்களின் சேட்டையை போலீசார் ரெக்கார்ட் செய்வதை அறிந்த மது பிரியர்கள் உச்சக்கட்டமாக “வீரப்பனுக்கு ஆயுதங்களைக் கடத்தியதே நாங்க தான சார்” எனத் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் ஆம்புலன்சை வரவழைத்து அதிக போதையில் அலப்பறை செய்த மதுப்பிரியர்கள் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கருமத்தம்பட்டி காவல் நிலையம் வாசலிலேயே காவல்துறையினருடன் மது பிரியர்கள் போதையில் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad