ஓடிக்கொண்டிருந்த காரில் தீ விபத்து: சரியான செயலால் குடும்பமே உயிர் தப்பியது!
சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் தனது குடும்பத்தினருடன் சேலம் மாவட்டம் தும்பல் பகுதிக்குத் தனது காரில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் கார், அம்மாபேட்டை அருகே மிலிட்டரி ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்திலிருந்து
புகை வெளியேறியுள்ளது.
இதையடுத்து உடனடியாக காரை நிறுத்திய செல்வக்குமார், காரிலிருந்தவர்களை துரிதமாகக் கீழே இறக்கிவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் கார் தீ பற்றி எரியத் தொடங்கியது.
இது குறித்துத் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்படவே, செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்துபோனது.
இந்த விபத்தின்போது காரில் பயணித்தவர்கள் உடனடியாக இறங்கியதால் அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்
No comments:
Post a Comment