விஏஓ, கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நியமனம்: அடித்து சொன்ன அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

விஏஓ, கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நியமனம்: அடித்து சொன்ன அமைச்சர்!

விஏஓ, கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நியமனம்: அடித்து சொன்ன அமைச்சர்!


தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் நேற்று நெல்லையில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “பட்டா தொடர்பாக தவறுகள் இருந்தால் அந்தந்த சப்.கலெக்டர்கள், ஆர்டிஓக்கள் வாரம் ஒருமுறை ஒவ்வொரு தாலுகாவிற்கும் சென்று அந்தக் குறையை தீர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நில அளவை பணிகளுக்கு 3 மாதம், 4 மாதம் என காத்திராமல் உடனே சர்வே செய்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் விரிவாக்கம் செய்யவும், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதே தவிர, தாலுகாக்கள், கோட்டங்கள் பிரிக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். இதற்காக முதல்வரிடமும், நிதித்துறையிடமும் தகுந்த ஆணை பெற்று பிரிக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad