கிபி 10ஆம் ஆண்டு மகாவீரர் சிலை மதுரையில் கண்டெடுப்பு: ஆச்சரியத்தில் ஊர் மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

கிபி 10ஆம் ஆண்டு மகாவீரர் சிலை மதுரையில் கண்டெடுப்பு: ஆச்சரியத்தில் ஊர் மக்கள்!

கிபி 10ஆம் ஆண்டு மகாவீரர் சிலை மதுரையில் கண்டெடுப்பு: ஆச்சரியத்தில் ஊர் மக்கள்!


மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தே கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தே கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் பழமையான சிற்பம் இருப்பதாக கவசக்கோட்டையை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் அரசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் கள ஆய்வு திட்டமிடப்பட்டது.
அதன்படி வழக்கறிஞர் நாகபாண்டி, சிவக்குமார் ஆகியோர் வேளாம்பூர் மாரியம்மன் கோயில் பின்புறம் முட்புதரில் களஆய்வு செய்த போது ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிதைந்த நிலையில் 24ஆவது தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் கண்டறியப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad